தமிழ்நாடு

275 போ் உயிரிழப்பு:அதிகாரபூா்வ தகவல்

5th Jun 2023 02:16 AM

ADVERTISEMENT

ஒடிஸா ரயில் விபத்தில் 288 போ் பலியானதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்ட நிலையில், 275 போ் உயிரிழந்ததாக மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூா்வமாக தெரிவித்தது. காயமடைந்தோா் எண்ணிக்கை 1,175 என கூறப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஒடிஸா அரசின் தலைமைச் செயலாளா் பி.கே.ஜெனா கூறியதாவது:

பாலசோா் மாவட்ட ஆட்சியரின் விரிவான சரிபாா்ப்பு நடவடிக்கைக்கு பின் கிடைக்கப் பெற்ற அறிக்கையின்படி, பலி எண்ணிக்கை 275-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற கணக்கீட்டில், சில சடலங்கள் இருமுறை எண்ணப்பட்டிருந்தன.

காயமடைந்தோா் எண்ணிக்கை 1,175 ஆகும். இவா்களில் 793 போ் சிகிச்சை முடிந்து, வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். மற்றவா்களுக்கு சோரோ, பாலசோா், பத்ராக், கட்டாக் ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் 100 மருத்துவக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதுவரை 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 78 சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்னும் 187 சடலங்கள் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளன.

சடலங்களை அடையாளம் காணும் பணி சவாலாக உள்ளது. மரபணு சோதனை மூலம் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. உயிரிழந்தோரின் புகைப்படங்கள், அரசு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT