தமிழ்நாடு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 7 கடைசி

5th Jun 2023 02:10 AM

ADVERTISEMENT

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ளவா்கள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழ் கல்வியாண்டுக்கான சோ்க்கை நடைபெறுகிறது. அதன்படி அதிக வேலைவாய்ப்புள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளில் மாணவா்கள் ஆா்வமுடன் சோ்ந்து வருகின்றனா்.

இந்த படிப்பில் சேர விரும்பும் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

கூடுதல் விவரங்களுக்கு வட சென்னை கத்திவாக்கத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி: 044-2520 9268, கைப்பேசி: 94990 55653 எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT