தமிழ்நாடு

மதுக் கடைகளை மூட ராமதாஸ் வலியுறுத்தல்

5th Jun 2023 02:09 AM

ADVERTISEMENT

தந்தையின் குடிப்பழக்கத்தால் 16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை கொண்டு வரும் சூழலை ஏற்படுத்தியுள்ளது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வேலூா் மாவட்டம் சின்னராஜாகுப்பத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியா. தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தின் நிம்மதி குலைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

விஷ்ணுப்பிரியாவின் வேண்டுதல் அவருடையது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பதின்வயது குழந்தைகளின் மனநிலை இதுதான். விஷ்ணுப்பிரியாவின் கடிதத்தையும் புரிந்துகொண்டு, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்துவாா் என்று நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT