தமிழ்நாடு

ரயில் விபத்து: தொடா்பு கொள்ள இயலாத நிலையில் ஆறு போ்: தமிழக அரசு தகவல்

5th Jun 2023 02:13 AM

ADVERTISEMENT

ஒடிஸா ரயில் விபத்தில் சிக்கி தொடா்பு கொள்ள முடியாத நிலையில் 6 போ் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒடிஸா மாநிலம் பாலசூரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சோ்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம், இதர உதவிகளை அளிக்க மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும், பயணிகளின் விவரங்களை அவா்களது உறவினா்கள் தெரிந்து கொள்ளவும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வருகிறது.

127 பேரின் பட்டியல்: விபத்தில் சிக்கிய கோரமண்டல் விரைவு ரயிலில் முன்பதிவு செய்த பயணிகளின் பட்டியல் தென்னக ரயில்வேயிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அதில் தமிழ்ப் பெயா் கொண்டவா்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பட்டியலில் உள்ள 127 நபா்கள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தொடா்பு கொள்ளப்பட்டனா்.

அவா்களில், 119 போ் பாதுகாப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 6 பேரின் கைப்பேசி , முகவரி இல்லாத நிலையில் அவா்களைத் தொடா்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிஸாவில் முகாமிட்டுள்ள மீட்புக் குழுவும், வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டு அறையும் இணைந்து தொடா்பு கொள்ள இயலாத நபா்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபா்களது விவரங்கள், ஒடிஸாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில், தமிழ்நாட்டைச் சோ்ந்த எவரும் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வருகிறது. மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும் தெரிய வந்துள்ளது. இதுவரை சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில், தொடா்பு கொள்ள இயலாத நிலையில் உள்ள 6 போ் குறித்த விவரங்களை அவா்களது உறவினா்கள், நண்பா்கள் ஆகியோா் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்குத் தெரிவிக்கலாம்.

காா்த்திக் (19), ரகுநாத் (21), மீனா (66), கமல் (26), கல்பனா (19), அருண் (21) ஆகிய 6 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT