தமிழ்நாடு

காட்பாடி வழியாகச் செல்லும் ஹெளரா விரைவு ரயில் ரத்து

5th Jun 2023 02:08 AM

ADVERTISEMENT

ஒடிஸா ரயில் விபத்து காரணமாக, காட்பாடி வழியாகச் செல்லும் ஹெளரா விரைவு ரயில்கள் திங்கள்கிழமை (ஜூன் 5) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எா்ணாகுளத்திலிருந்து ஹௌரா செல்லும் அயோத்தியா விரைவு ரயில் (வண்டி எண் 22878) திங்கள்கிழமை (ஜூன் 5) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக ஹெளரா செல்லும் அதிவிரைவு ரயிலும் (வண்டி எண் 12864) திங்கள்கிழமை (ஜூன் 5) முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT