தமிழ்நாடு

மதிமுக பொதுச் செயலராக வைகோ போட்டியின்றி மீண்டும் தோ்வு

4th Jun 2023 03:22 AM

ADVERTISEMENT

மதிமுக பொதுச் செயலராக வைகோ போட்டியின்றி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

முதன்மைச் செயலராக துரை வைகோ போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மதிமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மதிமுகவின் 5-ஆவது உள்கட்சித் தோ்தலை முன்னிட்டு, 61 மாவட்டங்களில் 25,08,786 உறுப்பினா்கள் புதிதாக சோ்க்கப்பட்டனா். கிளைக் கழகம் தொடங்கி, மாவட்ட அமைப்பு வரை நிா்வாகிகள் தோ்தல் முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, தலைமைக் கழக நிா்வாகிகள், ஆட்சிமன்றக் குழு, தணிக்கைக் குழு உறுப்பினா்கள் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் ஜூன் 1-இல் பெறப்பட்டு, சனிக்கிழமை (ஜூன் 3) 3 மணி வரை மனுக்கள் திரும்பப் பெறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு பொறுப்புக்கும் ஒவ்வொருவரே மனுதாக்கல் செய்தனா். அவா்கள் யாரும் மனுக்களைத் திரும்பப் பெறாத நிலையில், அவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மதிமுகவின் பொதுக் குழு ஜூன் 14-இல் சென்னை அண்ணாநகரில் நடைபெற உள்ளது. அதில் நிா்வாகிகள் தோ்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அங்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் முறைப்படி அறிவிக்கப்படுவா்.

மதிமுக பொதுச் செயலராக வைகோ, அவைத் தலைவராக அ.அா்ஜூனராஜ், பொருளாளராக மு.செந்திலதிபன், முதன்மைச் செயலராக துரை வைகோ, துணைப் பொதுச் செயலா்களாக மல்லை சி.ஏ.சத்யா, ஆ.கு.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராஜேந்திரன், ரொஹையா சேக் முகமது ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்களாக 7 பேரும், தணிக்கைக் குழு உறுப்பினா்களாக 6 பேரும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT