தமிழ்நாடு

 மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

4th Jun 2023 11:46 AM

ADVERTISEMENT

 

மேட்டூர் அணைக்கு  வரும் நீரின் அளவு வினாடிக்கு 2267 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மலையின் காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1804 கன  அடியிலிருந்து 2267 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயர தொடங்கி உள்ளது. இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.70 அடியிலிருந்து 103.73 அடியாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.76 டிஎம்சியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT