தமிழ்நாடு

எனது அப்பா குடிப்பழகத்தை நிறுத்த வேண்டும்: உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மகள் தற்கொலை!

4th Jun 2023 06:38 PM

ADVERTISEMENT

 

வேலூா்: குடியாத்தம் அருகே எனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, 16 வயது மகள் விஷ்ணு பிரியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூா் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு. கூலித் தொழிலாளரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணுபிரியா(16), குடியாத்தம் நெல்லூா்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதி 410 மதிப்பெண் பெற்றுள்ளாா்.

இதனிடையே, பிரபு நாள்தோறும் குடித்துவிட்டு வந்து அம்மாவிடம் தகராறு செய்து வந்ததால் விஷ்ணுபிரியா மனவேதனையில் இருந்து வந்த விஷ்ணு பிரியா சனிக்கிழை மாலை அப்பாவுக்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தனது வீட்டிலேயே தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

கூலி வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்த அம்மா, மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிா்ச்சியடைந்து கூச்சிலிட்டு கத்தியுள்ளார். 

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் கிராமிய போலீசார் விஷ்ணுபிரியா உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது அப்பாவுக்கு விஷ்ணுபிரியா உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதத்தில், "எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, எனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும், எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும்" என எழுதி வைத்துள்ளாா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT