தமிழ்நாடு

மணப்பாறை: ஆனாம்பட்டியில் மீன்பிடித் திருவிழா

4th Jun 2023 09:50 AM

ADVERTISEMENT

 

மணப்பாறை அருகே ஆனாம்பட்டி செல்லகவுண்டன் குளத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு விரால், கெண்டை, கெளுத்தி மீன்களை பிடித்து சென்றனர்.

10 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியாலும், அதிக அளவில் மீன்கள் கிடைத்ததாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி கிராமத்தில் சுமார் 7   ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது செல்லகவுண்டன் குளம். இதில், இன்று விடியற்காலை 6 மணிக்கு மீன் பிடித்திருவிழா நடைபெற்றது.

ADVERTISEMENT

10 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.  வழிபாட்டிற்கு பின் ஆனாம்பட்டி ஊர் நாட்டாமை ராமகிருஷ்ணன், ஊராட்சி நகர்மன்ற தலைவர் செந்தில்வடிவேல் அழகர்சாமி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் வெள்ளை வீசப்பட்டு மீன் பிடித் திருவிழாவை துவக்கி வைத்தனர். 

குளக்கரையில் கையில் வலைகளுடன் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெற்ற இந்த மீன்படி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

மேலும், சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்திருந்தனர். பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத்தொடங்கினர்.

அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, கொரவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியாலும், அதிக அளவில் மீன்கள் கிடைத்ததாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT