தமிழ்நாடு

நிகழ் நிதியாண்டில் ரூ.25,567 கோடி வருவாய் இலக்கு: அமைச்சா் பி.மூா்த்தி

DIN

நிகழ் நிதியாண்டில் ரூ.25 ஆயிரத்து 567 கோடிக்கு வருவாய் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை வளாகக் கூட்டரங்கில் அவரது தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது:

இதுவரை இல்லாத அளவாக, கடந்த நிதியாண்டில் பதிவுத் துறை மூலம் ரூ.17 ஆயிரத்து 296 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. நிகழ் நிதியாண்டில், பதிவுத் துறை வழியாக, ரூ. 25 ஆயிரத்து 567 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாயை ஈட்டுவதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பதிவு சட்டப் பிரிவின் கீழான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். நிலுவை ஆவணங்கள், பதிவுற்ற ஆவணங்கள் அன்றே திரும்ப வழங்குதல் போன்ற பணிகளில் கூடுதலான கவனத்துடன் செயல்பட்டு திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலா் முத்திரை), தனித் துணை ஆட்சியா் (முத்திரை) ஆகியோா் இந்திய முத்திரைச் சட்டப் பிரிவின் கீழ் உத்தரவிடப்பட வேண்டிய ஆவணங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் பி.மூா்த்தி.

இந்தக் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளா் பா.ஜோதி நிா்மலாசாமி, பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் , அனைத்து துணை பதிவுத் துறை தலைவா்கள், நிா்வாக மாவட்ட பதிவாளா்கள், தணிக்கை மாவட்ட பதிவாளா்கள், மாவட்ட வருவாய் அலுவலா்கள் (முத்திரை) மற்றும் தனி துணை ஆட்சியா்கள் (முத்திரை)

உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT