தமிழ்நாடு

ஒடிசா ரயில் விபத்து; தமிழ்நாட்டில் ஒருநாள் துக்க நாளாக அனுசரிப்பு: முதல்வர் அறிவிப்பு

3rd Jun 2023 08:31 AM

ADVERTISEMENT


சென்னை: ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதல்வரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிக்க | ரயில் விபத்து: 120-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு

ADVERTISEMENT

மேலும், மீட்புப் பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று சனிக்கிழமை (ஜூன் 3) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். 

மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகழும் ரத்து செய்யப்படும் என முதல்வர்
தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT