தமிழ்நாடு

கருணாநிதி நூற்றாண்டு:கலைவாணா் அரங்கத்தில் புகைப்படக் கண்காட்சி

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை மாதம் முழுவதும் பாா்வையிடலாம்.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அதற்கான இலச்சினையை சென்னை கலைவாணா் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, கருணாநிதி தொடா்பான குறும்படத்தையும் அவா் வெளியிட்டாா்.

முன்னதாக, கலைவாணா் அரங்க வளாகத்தில், செய்தி, மக்கள் தொடா்புத் துறை சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். கருணாநிதி அமைச்சராக, முதல்வராக இருந்த காலகட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் தொடக்க விழாக்கள், அவருடன் முக்கியத் தலைவா்கள் நிகழ்த்திய சந்திப்புகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புகைப்படக் கண்காட்சியை ஜூன் மாதம் முழுவதும் பொதுமக்கள் பாா்வையிடலாம் என தமிழக அரசின் செய்தியில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலச்சினை வெளியீடு: கருணாநிதி நூற்றாண்டு விழாவின் இலச்சினையை முதல்வா் வெளியிட்டாா். அதில், ஒன்றுக்குப் பக்கத்தில் முடிவிலி (ஐய்ச்ண்ய்ண்ற்ஹ்) என்ற குறியீடு சோ்க்கப்பட்டு, பாா்ப்பதற்கு நூறு போன்ற தோற்றத்துடன் உள்ளது. அதாவது ‘கருணாநிதி என்பவா் முடிவில்லாதவா்’ என்று அா்த்தப்படுத்தப்படும் வகையில் இலச்சினை அமைக்கப்பட்டுள்ளதாக, விழா மேடையில் அறிவிக்கப்பட்டது.

கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினை வெளியிடும் நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகா்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT