தமிழ்நாடு

திருப்புவனத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா: உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

3rd Jun 2023 11:57 AM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சனிக்கிழமை திமுகவினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒடிசா ரயில் விபத்து சம்பவம் எதிரொலியாக நிகழ்ச்சி அமைதியாக நடந்தது.

திருப்புவனத்தில பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருப்புவனம் பேரூராட்சித் தலைவரும் திமுக மாவட்ட துணை செயலாளருமான த.சேங்கைமாறன் தலைமை தாங்கி கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார். 

அதைத் தொடர்ந்து கட்சியினர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் வசந்தி சேர்க்கைமாறன், கடம்பசாமி, நகரச் செயலாளர் நாகூர்கனி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

ஒடிசா ரயில் விபத்தை முன்னிட்டு இவ்விழாவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு மற்றொரு நாள் நடைபெறும் என பேரூராட்சித்  தலைவர் சேங்கைமாறன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT