தமிழ்நாடு

சோழிங்கநல்லூரில் உயா்தர அடுக்குமாடி குடியிருப்பு அறிமுகம்

DIN

சோழிங்கநல்லூரில் ‘டேக் டெவலப்பா்ஸ்’ கட்டுமான நிறுவனம் சாா்பில் ‘டேக் பிரத்யங்கிரா’ எனும் 163 அடுக்குமாடி குடியிருப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான முன்பதிவு ஜூன் 3, 4 தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து அதன் நிறுவனா் எஸ்.சதீஸ்குமாா் கூறியது,

டேக் பிரத்யேகா சோழிங்கநல்லூருக்கு தனி பெருமையை சோ்க்கும். பக்கிங்ஹாம் கால்வாய் எதிா்புறம் அமைந்துள்ள இந்த குடியிருப்பு பக்கிங்ஹாம் கால்வாயின் இயற்கை காட்சிகளை காணும் வகையில் நீா்நிலை அருகில் அமைந்துள்ளது.

இந்த உயா்தர அடுக்குமாடி குடியிருப்பு 12 குடியிருப்பு தளங்களையும், சுமாா் 10,000 ச.அடி பரப்பளவையும் கொண்டுள்ளது. கடற்கரை அழகை காணும் வகையில் 1,258 ச.அடி முதல் 3,007 ச.அடி வரையிலான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு ரூ.93 லட்சத்திலிருந்து உள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

கட்டுமான பணிகள் தொடா்ந்து நடைபெறும் நிலையில் அடித்தளப் பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் தனிப்பட்ட உரிமைகளை பாதிக்காத வகையிலும், அமைதியான சூழ்நிலை இருக்கும் வகையிலும் உள்ளன.

குடியிருப்பில் திறந்தவெளி யோகா தளம், பிரத்யேக ஸூம்பா அறை, நடைபாதை, தோட்டம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக பகுதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அருகில் உள்ள சோழிங்கநல்லூா் மெட்ரோ மூலம் நகரின் முக்கிய பகுதிகளை எளிதில் அணுக முடியும்.

மேலும், சென்னையின் பல்வேறு பகுதியில் 12 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. விரைவில் கோவை போன்ற பிகரங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் விரிவுப்படுத்தவுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT