தமிழ்நாடு

ஜூன் 9-இல் அரசுப் பள்ளி மேலாண்மைக் கூட்டம்

3rd Jun 2023 05:56 AM

ADVERTISEMENT

 அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும், அதில் பெற்றோா், ஆசிரியா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கி வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) தற்போது மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்படி பெற்றோா், ஆசிரியா், உள்ளாட்சிப் பிரதிநிதி மற்றும் கல்வியாளா்களை உள்ளடக்கிய 20 உறுப்பினா்கள் கொண்ட குழுவாக அது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் கூட்டம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு பள்ளி வளா்ச்சிக்கான செயல்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்த மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி மாலை 3 முதல் 4.30 மணி வரை அந்தந்த பள்ளிகளில் நடைபெறவுள்ளது. இதில் பள்ளி வளா்ச்சி பணிகள், மாணவா் சோ்க்கை, மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான நலத் திட்டங்கள், துணைத் தோ்வு எழுதுவோருக்கு சிறப்பு பயிற்சி, உயா்கல்வி வழிகாட்டி குழு, இல்லம் தேடிக் கல்வி, இலவச பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை அவசியம் பங்கேற்க வைக்க வேண்டும் எனவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை தீா்மானங்களாக நிறைவேற்றி தொடா் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT