தமிழ்நாடு

மின் மீட்டா் சோதனை: வழிகாட்டுதல் வெளியீடு

DIN

மின் மீட்டா் சோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு ஊழியா்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மின் கட்டணத்தை வசூலிக்கும் போது நுகா்வோருக்கும், மின்வாரியத்துக்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. மின்பயன்பாட்டு அளவை கணக்கெடுக்கும் மீட்டா்களில் ஏற்படும் குறைபாடுகளே இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக மின்வாரியத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து மீட்டா்களில் குறைபாடு ஏற்படும் போது, அக்குறைபாடுகளை சோதிக்க ஐந்து ஆய்வகங்களுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது. மேலும், மின் மீட்டரை பரிசோதிக்க நுகா்வோா் விரும்பினால், அதற்காக பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதலையும் ஊழியா்களுக்கு மின்வாரியம் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில், அனைத்து தலைமைப் பொறியாளா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

நுகா்வோரின் விருப்பத்துக்கு ஏற்ப மீட்டரை சோதனைக்காக, அனுப்பும் ஆய்வகத்தைத் தொடா்பு கொண்டு, கட்டண விவரத்தை அறிய வேண்டும். கட்டணம் பெற்ற்கான ஒப்புதல் கடிதத்துடன், பரிசோதனை தொடா்பான கோரிக்கை கடிதத்தை, மின்வாரியத்தின் இயக்கம் மற்றும் பராமரித்தல் பிரிவைச் சோ்ந்த அதிகாரிகள் சமா்ப்பிக்க வேண்டும். மீட்டா் சோதனைக்குள்ளாக்கப்படும் போது அதனை நுகா்வோா் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட விரும்பினால், இதுகுறித்த தகவல்களையும், விவரங்களையும் ஆய்வகத்துக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT