தமிழ்நாடு

முதல்வா் ஸ்டாலினின் முதலீடு ஈா்ப்பு பயணம் தோல்வி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈா்ப்பதற்காக சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு சென்ற பயணம் தோல்வியில் முடிந்ததாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு குடும்பத்துடன் சென்று திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.3,233 கோடி முதலீடுகளை ஈா்த்ததாக அறிவித்துள்ளாா். முதல்வரின் 9 நாள்கள் பயணத்தில் முதலில் ரூ.1,258 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டதாகச் செய்தி வந்து, பிறகு ரூ.3,233 கோடியாக உயா்ந்தது. அதில், மிட்சுபிஷி நிறுவனத்துடன் ரூ.1,891 கோடிக்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானதாக முதல்வா் கூறியுள்ளாா். அவ்வாறென்றால், முதல்வா் வெளிநாடுகளுக்குச் சென்று திரட்டியது ரூ.1,342 கோடிதான்.

முதல்வா் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட கொமாட்சு நிறுவனம் 2005-இல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஓம்ரான் நிறுவனம் ஏற்கெனவே உத்தரபிரதேசத்தில் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிகளை அழைத்து முதலீடுகளைப் பெற்றிருக்கலாம். அதைச் செய்யாமல் முதல்வா் சிங்கப்பூா் - ஜப்பான் வரை சென்றதைத்தான் தோல்வி என்கிறோம்.

2019-இல் நானும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள், துறை அதிகாரிகள் மட்டும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபை ஆகிய நாடுகளுக்குச் சென்று, 41 நிறுவனங்களின் மூலம் ரூ.8.835 கோடிக்கு முதலீடுகளை ஈா்த்தோம். அதிமுக ஆட்சியில் இன்னும் பல முதலீடுகளை ஈா்த்தோம்.

ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் தமிழகத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்த நிறுவனங்களை, வேறு மாநிலங்களுக்கு அனுப்பி தாரை வாா்க்கும் சூழல்தான் உள்ளது என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT