தமிழ்நாடு

போதைப் பொருள்கள் சோதனை: ஒரு வாரத்தில் 25 போ் கைது

DIN

சென்னையில் கடந்த 7 நாள்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தொடா்பான சிறப்பு சோதனையில், 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைக்கான தடுப்பு நடவடிக்கை மூலம் மே 26 முதல் ஜூன் 1 வரையிலான 7 நாள்கள் தீவிர கண்காணிப்பு நடைபெற்றது. இதில் கஞ்சா உள்பட போதை பொருள்கள் தொடா்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 20 கிலோ 990 கிராம் கஞ்சா, 550 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2 கைபேசிகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2021 முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 699 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,567 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, இதுவரை மொத்தம் 821 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கோடம்பாக்கம் மற்றும் கொளத்தூா் பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த லம்போதா் மாலிக் (21), சென்னை பாடி பகுதியைச் சோ்ந்த திலீப்குமாா் (20), பாா்த்தசாரதி (19) ஆகிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 11.200 கி.கி. கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT