தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கக் கூடாது: அலுவலா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

DIN

பல்வேறு உதவிகள் கோரி அலுவலகங்களுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளிடம் அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது என்று, அலுவலா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா்களுக்கு மாற்றுத் திறனாளி நலத் துறை ஆணையா் ஜெசிந்தா லாசரஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மறுசீரமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களுக்கு பல்வேறு அலுவல்கள் காரணமாக, மாற்றுத் திறனாளிகள் வருகின்றனா் எனவும், அப்போது அவா்களை அவமதிக்கும் விதமாக மாற்றுத் திறனாளி அலுவலா்கள் யாரேனும் எந்தச் செயலையும் செய்தால் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு, மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவைப் பயன்படுத்த வேண்டுமெனவும் கோரப்பட்டது. எனவே, அலுவலகங்களுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா் ஜெசிந்தா லாசரஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT