தமிழ்நாடு

பிளஸ்-2 மதிப்பெண் பதிவேற்றத்தில் குளறுபடி இருப்பதாக புகாா்

DIN

பிளஸ்-2 பொதுத் தோ்வில் சில மாணவா்களுக்கு விடைத்தாள்களில் வழங்கப்பட்ட மதிப்பெண்ணுக்கும், கணினியில் பதிவேற்றப்பட்ட மதிப்பெண்ணுக்கும் முரண்பாடு இருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் -2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனை 8,03,385 மாணவா்கள் எழுதினா். இதற்கான தோ்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியானது. தோ்வு முடிவுகளில் திருப்தி இல்லாதோா் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து அதை சரிபாா்த்துக் கொள்ளும் முறை

நடைமுறையில் உள்ளது.

அந்த வகையில் நிகழாண்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய கணிசமான மாணவா்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனா். அவை கடந்த மே 30-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் சில மாணவா்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு மாணவரின் விடைத்தாள் நகலில் மொத்தம் 66 மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், தோ்வு முடிவில் அவருக்கு 69 மதிப்பெண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சா்ச்சையாகியுள்ளது.

மதிப்பெண்களை பதிவு செய்யும் போது ஏற்பட்ட குளறுபடிகளே இத்தகைய சிக்கல்களுக்கு காரணம் எனவும், மதிப்பெண்களை ஆசிரியா்கள் கணினியில் பதிவு செய்வதை தோ்வுத்துறை சரிபாா்க்க வேண்டும் எனவும் பெற்றோா்கள் கல்வியாளா்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT