தமிழ்நாடு

ஒடிசாவிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய 50 ரயில் பயணிகள்

3rd Jun 2023 02:43 PM

ADVERTISEMENT


சென்னை: ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே மூன்று ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 261 பேர் பலியாகினர். சுமார் 900 பேர் காயமடைந்தனர். விபத்தில் நல்வாய்ப்பாக தப்பிய 50 பேர் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

ஒடிசாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 21 பெட்டிகளும் தடம்புரண்டன. ஆனால், முதல் 5 பெட்டிகள் அதிகம் சேதமடைந்துள்ளன.

சேதமடையாத பெட்டிகளில் பயணித்து, சிறிய காயங்களுடன் மீட்கப்பட்ட தமிழர்கள், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, விமானம் மற்றும் சிறப்பு ரயில்கள் மூலம் சென்னை அழைத்து வரும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஒடிசாவிலிருந்து விமானம் மூலம் 50 தமிழர்கள் இன்று சென்னை அழைத்து வரப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட தமிழர்களுடன் புவனேஸ்வரத்திலிருந்து சிறப்பு ரயிலும் சென்னைக்கு புறப்பட்டுவிட்டது.

ADVERTISEMENT

விபத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்கள் பேசுகையில், ரயில் பெட்டிகள் திடீரென பயங்கரமாகக் குலுங்கியது. பயணிகள் அனைவரும் பல இடங்களில் சென்று விழுந்தோம். பிறகு ஒரே மரண ஓலம் கேட்டது. எங்குப் பார்த்தாலும் பெட்டிகள் சிதறிக் கிடந்தன. உயிருக்குப் போராடியவர்கள் சிலரை மீட்டு வெளியே கொண்டு வந்தோம் என்கிறார்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT