தமிழ்நாடு

ஆணவக்கொலையைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும்

2nd Jun 2023 07:26 PM

ADVERTISEMENT

ஆணவக்கொலையைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சாதிவெறிப் பித்தர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருப்பதுடன், முதல் குற்றவாளி உயிருள்ள வரையில் சிறையிலிருக்க வேண்டுமெனவும் உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்திருப்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது. 

இந்நிலையில், ஆணவக்கொலையைத் தடுத்திட ஏதுவாக சட்டமியற்ற முன்வர வேண்டுமென தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துகிறோம்.

அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் துணிந்து வாதாடி நீதிகாத்த வழக்குரைஞர்கள் ப.ப.மோகன், லஜபதிராய் உள்ளிட்ட அனைவருக்கும் சிறுத்தைகளின் நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT