தமிழ்நாடு

தாம்பரம்-செங்கோட்டை ரயில் வாரம் மூன்று முறை இயக்கம்

2nd Jun 2023 12:06 AM

ADVERTISEMENT

தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் வியாழக்கிழமை முதல் வாரம் 3 முறை இயக்கப்படுகிறது.

தாம்பரம்-செங்கோட்டை இடையே வாராந்திர விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஏப்.8-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மக்கள் பயன் பெறும் வகையில் ஏப்.16-ஆம் தேதி முதல் வாரந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னையிலிருந்து திருவாரூா்-காரைக்குடி வழித்தடத்தில் இயக்கப்படும் முதல் ரயில் சேவை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் இந்த ரயில் வாரம் மூன்று முறை இயக்கப்படுகிறது. இதில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையும், செங்கோட்டையிலிருந்து தாம்பரத்துக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமையும் இயக்கப்படும்.

தாம்பரத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகா், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி வழியாக மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமாா்க்கமாக செங்கோட்டையிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT