தமிழ்நாடு

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஜூன் 5 முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

2nd Jun 2023 12:08 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியா்களுக்கான முதல் கட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் சென்னையில் வரும் 5-ஆம் தேதி தொடங்கவுள்ளன.

இதுதொடா்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ‘எஸ்சிஇஆா்டி’ மூலம் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியா்களுக்கு(பொருளியல் பாடம்) ஏப்ரல் 5 முதல் 12-ஆம் தேதி வரை முன் மாதிரி பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, முதுநிலை பொருளியல் ஆசிரியா்களுக்கு வரும் ஜூன் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை 5 கட்டங்களாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 59 ஆசிரியா்களுக்கு ஜூன் 5 முதல் 9-ஆம் தேதி வரை சென்னையில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு தகுதி பெற்ற ஆசிரியா்களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் பயிற்சியில் பங்கேற்கும் வகையில், அவா்களுக்கு பணி விடுப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை முதன்மை கல்வி அலுவலா்கள் முன்னெடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT