தமிழ்நாடு

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் தங்க கருட வாகனத்தில் காட்சியளித்த பெருமாள்!

2nd Jun 2023 08:36 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி,  சுவாமி தங்க கருட வாகனத்தில் அலங்காரமாகி காட்சியளித்தார்

அத்திவரதர் புகழ்பெற்றதும், வரலாற்று சிறப்புமிக்கது காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே மாதம் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவின் மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக உற்சவர் தேவராஜ சுவாமி நீல பட்டு உடுத்தி தங்க கருட வாகனத்தில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா வந்தார். 

ADVERTISEMENT


கருட சேவையை காண உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் எஸ்.பி.சுதாகர் தலைமையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

கருட வாகனத்தில் வீதி உலா வந்த பெருமாள் தேசிகர் சன்னிதி, பிள்ளையார்பாளையம், ராஜ வீதிகள் வழியாக வீதி உலா வந்து மீண்டும் சந்நிதியை அடைந்தார். கருட சேவை விழாவில் கோயில் செயல் அலுவலர் ச. சீனிவாசன் குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் ந. தியாகராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். 

இதையும் படிக்க: சென்னையில் நேற்றைவிட வெயில் அதிகரிக்கும்!

மாலையில் தங்க அனுமான் வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT