தமிழ்நாடு

பூந்தமல்லியில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்: 20 பேர் காயம்!

2nd Jun 2023 10:21 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை பூந்தமல்லியில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே இன்று காலை சிறிய ரக சரக்கு வேன் திடீரென பிரேக் போட்டதால், அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT