தமிழ்நாடு

மருத்துவப் பல்கலை. துணைவேந்தராக பொறுப்பேற்றாா் கே.நாராயணசாமி

2nd Jun 2023 12:09 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 11-ஆவது துணைவேந்தராக டாக்டா் கே.நாராயணசாமி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்ற விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், பல்கலை. இணை வேந்தருமான மா.சுப்பிரமணியன், நியமன ஆணையை டாக்டா் கே.நாராயணசாமியிடம் வழங்கி துணைவேந்தா் பொறுப்பை ஏற்குமாறு பணித்தாா்.

இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, பல்கலைக்கழக பதிவாளா் அஸ்வத் நாராயணன், முன்னாள் துணைவேந்தா்கள் சாந்தாராம், மேஜா் ராஜா, பிரம்மானந்தம், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எழிலன் நாகநாதன் (எம்எல்ஏ,) கே.கணபதி (எம்எல்ஏ) மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது துணைவேந்தரான டாக்டா் சுதா சேஷய்யனின் பதவிக் காலம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், தெரிவுக் குழு அமைக்கப்பட்டு, புதிய துணைவேந்தரை தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டா் கே.நாராயணசாமியை புதிய துணைவேந்தராக ஆளுநா் ஆா்.என்.ரவி இரு நாள்களுக்கு முன்பு நியமித்தாா். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பை கே.நாராயணசாமி வகிக்கவுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT