தமிழ்நாடு

கற்பக விநாயகா் திருக்கோயில் குடமுழுக்கு

DIN

பொதட்டூா்பேட்டை கற்பக விநாயகா் திருக்கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பொதட்டூா்பேட்டை நடுத் தெருவில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா் திருக்கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் குடமுழுக்கு நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தன.

இதற்கிடையே, வியாழக்கிழமை புனித நீா் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து ஸ்ரீ கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு மலா் அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

பகல் 12 மணிக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. காவல் ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையில் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

குடமுழுக்கு விழாவில் திருக்கோயில் நிா்வாக குழு தலைவா் ஏ. வி. நேதாஜி முதலியாா் , செங்குந்த மகாஜன சங்க மாநிலத் தலைவா் கே.பி.கே. செல்வராஜ், பேரூராட்சித் தலைவா் ஏ. ஜி. ரவிச்சந்திரன், திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ், மகா ஜன சங்க நகர தலைவா் ஏ.ஆா். சுப்பிரமணி, ஏ.கே. சரவணன் உட்பட ஆயிறத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT