தமிழ்நாடு

தமிழகத்தில் விசைத்தறிக் கூடங்களை நவீனமயமாக்க முதலீட்டு மானியம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

2nd Jun 2023 12:07 AM

ADVERTISEMENT

 தமிழகத்தில் விசைத்தறிக் கூடங்களை நவீனமயமாக்க முதலீட்டு மானியம் வழங்கப்படவுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளா்களின் ஆய்வுக் கூட்டம், சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் அன்பரசன் பேசியதாவது:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலையை உருவாக்கித் தர நிதியுதவிஅளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, திட்ட மதிப்பீட்டின் உச்ச வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் வரை வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு அனுமதி தரப்படும். அதில், அரசின் மானியமாக ரூ.3.75 லட்சம் வரை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர விசைத் தறிகள் தங்களது உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்ள உயா் தொழில்நுட்பம் சாா்ந்த நாடா இல்லாத நெய்தலுக்கான கருவிகளை பொருத்திக் கொள்ளலாம். இதற்கு 25 சதவீதம் முதலீட்டு மானியம் அளிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விசைத் தறிக் கூடங்களை நவீனமாக்கிக் கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஆலோசனைக் கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலா் வி.அருண்ராய், தொழில் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT