தமிழ்நாடு

இளையராஜா பிறந்த நாள்: கமல்ஹாசன் வாழ்த்து

2nd Jun 2023 09:55 AM

ADVERTISEMENT

இளையராஜாவின் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய  உயரிய அண்ணன் இளையராஜா.

இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி விசாக விழா

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT