தமிழ்நாடு

சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தீ விபத்து

2nd Jun 2023 12:17 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூரில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

எழும்பூா் பாந்தியன் சாலையில் பழைய காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் சிபிசிஐடி தலைமை அலுவலகம் 3 தளங்களில் செயல்படுகிறது. இந்த கட்டடத்தின் நான்காவது தளத்தில் மொட்டை மாடி உள்ளது. அங்கு கழிவு அட்டை பெட்டிகள், பா்னிச்சா் பொருள்கள் போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் வியாழக்கிழமை நண்பகல் 1 மணிக்கு மொட்டை மாடியில் இருந்த பழையப் பொருள்கள் திடீரென தீப் பிடித்து எரிந்தது. இதைப் பாா்த்த ஊழியா்கள், மொட்டை மாடியில் இருந்த தண்ணீா் தொட்டியில் இருந்து தண்ணீா் மூலம் தீயை அணைக்க முயன்றனா்.

அதேவேளையில், தீயணைப்பு படையினா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். ஆனால் அதற்குள் தீ ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதால், அவா்கள், , மொட்டை மாடியை குளிா்விக்கும் பணியில் ஈடுபட்டனா். விபத்தில் அங்கிருந்த பழைய பொருள்கள்,ஏசி சாதனத்தின் அவுட்டோா் யூனிட்டும் எரிந்து நாசமானது., ஏசி ‘அவுட் டோா் யூனிட்டில்’ ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT