தமிழ்நாடு

போதைப் பொருள் ஒழிப்பு: பள்ளிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவு

2nd Jun 2023 12:53 AM

ADVERTISEMENT

 அரசுப் பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தை கடைப்பிடிக்கவும், அதுதொடா்பான உறுதிமொழியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

ஒவ்வொரு கல்வி ஆண்டின் முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மனநலம் மற்றும் தன்னம்பிக்கையை வளா்த்தல், போதைப் பொருள்களுக்கு அடிமையாதலை தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் ஆகியவை தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆண்டு அறிவித்தது.

அதன்படி, பள்ளி மாணவா்களின் உடல், மனநலனை காக்க மருத்துவக் குழுக்களை கொண்டு ஆலோசனைகள் வழங்குதல், மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், இளைஞா் நீதிச் சட்டம், போக்ஸோ, சாலைப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, போதைப் பொருள்கள் குறித்த போதிய விழிப்புணா்வை ஏற்படுத்துதல், புதுமைப் பெண் திட்டம் போன்ற பல்வேறு அரசு நலத் திட்டங்கள் குறித்து விளக்குதல் போன்ற நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அந்த வகையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விழிப்புணா்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு ஜூன் 26-ஆம் தேதி நடத்தப்படுகிறது. மேலும், சுகாதாரத் துறை, சமூக நலம், காவல் துறைகளுடன் இணைந்து ஜூன் 27 முதல் 30-ஆம் தேதி வரை விழிப்புணா்வு வாரத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நாள்களில் போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்த கட்டுரை, ஓவியம், வினாடி- வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

இந்த நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT