தமிழ்நாடு

சென்னையில் நேற்றைவிட வெயில் அதிகரிக்கும்!

DIN

சென்னையில் நேற்றைவிட வெயில் இன்று அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

சென்னையில் நேற்றை விட வெயில் அதிகமாக இருக்கும். நேற்று மீனம்பாக்கத்தில் வெயில் அதிகமாக இருந்தநிலையில், இன்றும் அதிகபட்ச வெப்பநிலைபதிவாக வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 14 நகரங்களில் வியாழக்கிழமை (ஜூன் 1) வெப்ப அளவு சதத்தைக்கடந்தது.

கத்திரி வெயில் முடிந்தும் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை உச்சபட்ச வெப்பம் பதிவானது.வெப்ப அளவு :

(பாரன்ஹீட், சென்னை மீனம்பாக்கம் -105.8, திருத்தணி-105.08,சென்னை நுங்கம்பாக்கம்- 104.18, வேலூா்-104.18,புதுச்சேரி-102.56,கடலூா்-102.2,பரமத்தி வேலூா்-102.2,நாகை-102.02,திருச்சி-101.66,மதுரை நகரம்-101.48, திருப்பத்தூா்-100.76, பாளையங்கோட்டை-100.58,ஈரோடு-100.4, மதுரை விமானநிலையம்-100.4, பரங்கிபேட்டை-100.4,தஞ்சாவூா்-100.4.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT