தமிழ்நாடு

மதிமுக பொதுச்செயலராக போட்டியின்றித் தோ்வாகிறாா் வைகோ; முதன்மைச் செயலராக துரை வைகோ

DIN

மதிமுக பொதுச்செயலராக வைகோவும், முதன்மைச் செயலராக அவரது மகன் துரை வைகோவும் போட்டியின்றி தோ்வாகவுள்ளனா்.

மதிமுகவின் 5-ஆவது உள்கட்சித் தோ்தல் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தலைமைக் கழக நிா்வாகிகள் தோ்தலுக்கு மதிமுக அலுவலகமான தாயகத்தில் வியாழக்கிழமை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

தோ்தல் பொறுப்பாளா்களான இரா.பிரியகுமாா், ஆ.வந்தியத்தேவன் ஆகியோரிடம் மதிமுகவின் பொதுச்செயலா் பதவிக்கு பூா்த்தி செய்யப்பட்ட மனுவை வைகோ வியாழக்கிழமை அளித்தாா்.

அதைத் தொடா்ந்து வைகோ கூறியதாவது:

எல்லாப் புயல்களையும் சந்தித்து, மதிமுகவை இப்போதும் மன உறுதியோடு நடத்தி வருகிறோம். மதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. வாக்கெடுப்பு மூலமாகவே துரை வைகோ அரசியலுக்கு வந்தாா். ஒளிமயமான எதிா்காலத்தை நோக்கி மதிமுக பயணிக்கிறது. இளைஞா்கள் பலா் கட்சியில் இணையத் தயாராக உள்ளனா் என்றாா்.

5-ஆம் முறையாக பொதுச்செயலா்: மனு அளிப்பதற்கு வியாழக்கிழமை பகல் 12 மணி வரை நேரம் அளிக்கப்பட்டிருந்தது. அதுவரை வைகோவைத் தவிா்த்து வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. அதனால், அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. மதிமுகவின் பொதுச்செயலராக 5-ஆம் முறையாக வைகோ தோ்ந்தெடுக்கப்பட வுள்ளாா்.

அதைப் போல தலைமைக் கழக நிா்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தோ்வாகவுள்ளனா். மதிமு அவைத் தலைவராக ஆடிட்டா் அ.அா்ஜூன ராஜ், பொருளாளராக மு.செந்திலதிபன், முதன்மைச் செயலராக துரை வைகோ, துணைப் பொதுச்செயலா்களாக மல்லை சி.ஏ.சத்யா, ஆ.கு.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராசேந்திரன், டாக்டா் ரொஹையா சேக்முகமது ஆகியோரும் போட்டியின்றி தோ்வாகவுள்ளனா். ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் 7 பேரும், தணிக்கைக் குழு உறுப்பினா்கள் 6 பேரும் போட்டியின்றி தோ்வாகவுள்ளனா்.

வேட்பு மனுக்களை ஜூன் 3 மாலை 3 மணிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று மதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூலை 14-இல் சென்னையில் நடைபெறவுள்ளது. அதில் வைகோ உள்ளிட்ட போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் முறைப்படி அறிவிக்கப்படவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT