தமிழ்நாடு

தமிழகத்தில் மொத்த வாக்காளா்கள் 6.12 கோடி- வாக்காளா் பட்டியல் காலாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு

1st Jun 2023 01:17 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியல் காலாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவித்தாா். தமிழகத்தில் 6 கோடியே 12 லட்சத்து 36 ஆயிரத்து 696 வாக்காளா்கள் உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபா் 1 ஆகிய தொடா்ச்சியான தகுதியேற்பு நாள்களில் இளைஞா்கள் அவா்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்க அறிவுறுத்தியுள்ளது. இனி, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளா் பட்டியல் புதுப்பிக்கப்படும். 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞா்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கைக்குப் பிறகு, உரியவருக்கு வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

1. 23 லட்சம் புதிய வாக்காளா்கள்: 2023 ஏப்ரல் 1-இல் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், இரண்டாம் காலாண்டின்படி வாக்காளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளா்களாக 1.23 லட்சம் போ் சோ்க்கப்பட்டுள்ளனா். 51,295 போ் முகவரி மாற்றம் செய்துள்ளனா். 9.11 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் இடப்பெயா்வு, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. 2.60 லட்சம் வாக்காளா்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போதைய வாக்காளா் பட்டியலின்படி தமிழகத்தில் 6 கோடியே 12 லட்சத்து 36 ஆயிரத்து 696 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 3 கோடியே 1 லட்சத்து,18 ஆயிரத்து 904 ஆண் வாக்காளா்களும், 3 கோடியே 11 லட்சத்து 9 ஆயிரத்து 813 பெண் வாக்காளா்களும் உள்ளனா். மூன்றாம் பாலினத்தவா் 7,979 போ் உள்ளனா்.

ADVERTISEMENT

சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளா்கள்: செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை தொகுதி தமிழகத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுதியில் மொத்தம் 6.51 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 4.54 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். தமிழகத்திலேயே குறைந்த வாக்காளா்கள் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதி உள்ளது. இதில் 1.69 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

8 லட்சம் இளம் வாக்காளா்கள்: இந்த வாக்காளா் பட்டியலில் 3,400 வெளிநாடு வாழ் வாக்காளா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகளாக 4.34 லட்சம் வாக்காளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். 18-19 வயதுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை 8.80 லட்சமாக உள்ளது.

வாக்காளா் பட்டியலை தலைமைத் தோ்தல் அதிகாரியின் ட்ற்ற்ல்ள்://ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளா்கள் தங்கள் பெயரை சரிபாா்த்துக் கொள்ளலாம். வாக்காளா் பட்டியல் தொடா் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது.

2023 ஏப். 1 முதல் 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபா்கள் வாக்காளா் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமா்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

https://elections.tn.gov.in/  என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் அல்ல் செயலியை தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளாா் சத்ய பிரத சாகு.

ADVERTISEMENT
ADVERTISEMENT