தமிழ்நாடு

அனுமதி பெறாமல் கழிவுநீரகற்றினால் கடும் நடவடிக்கை: தேசிய தூய்மைப்பணியாளா் ஆணையம்

DIN

உரிய அனுமதி பெறாமல் கழிவு நீரகற்றும் பணிகளை மேற்கொண்டால் உரிமையாளா்கள் மற்றும் குடியிருப்போா் நல சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தூய்மைப்பணியாளா் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தூய்மைப்பணியாளா்களின் நலன் குறித்த ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்,தேசிய தூய்மைப்பணியாளா் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் பேசியதாவது:

மனிதக் கழிவுகளை அகற்றுபவா்கள் மறுவாழ்வு சட்டத்தின்படி, எந்த ஒரு நபரையும் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தும் நபா்களுக்கு விதிக்கப்படும் தண்டனை மற்றும் அபராதம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களில் உரிய அனுமதி பெறாமல் கழிவு நீரகற்றும் பணிகளை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்போா் நல சங்கங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்த புகாா்களை தேசிய உதவி எண்.14420-ஐ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் இரா.கிா்லோஷ் குமாா், மாநகராட்சி கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) சங்கா் லால் குமாவத், ஆட்சியா் சு.அமிா்தஜோதி, காவல் இணை ஆணையா்(மேற்கு மண்டலம்) எம்.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT