தமிழ்நாடு

சேலம் பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து: 3 பேர் பலி

DIN

சேலம் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர்.

சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் ஏராளமானோர் உரிய உரிமம் பெற்று நாட்டு வெடி பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். 

சேலம் மற்றும் அதனை சுற்றுவட்டார  பகுதிகளில் நடைபெறும் திருவிழாவிற்காக சர்க்கார் கொல்லப்பட்டியில் இருந்து அதிக அளவில் நாட்டு வெடி மருந்து சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியில் சதிஸ் என்பவர் உரிமை பெற்று நாட்டு பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில் இன்று காலை சதீஷ் மற்றும் பத்துக்கு மேற்பட்டோர் பட்டாசுக் கிடங்கில் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 4 மணியளவில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயங்கர சத்தத்துடன் பட்டாசுடன் வெடித்து சிதறியது.

நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் திடீர் ஏற்பட்ட வெடி விபத்தில் எரிந்த நிலையில் சிதரை கடக்கும் கூடாரங்கள்.

இதில்  பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அனைவரும் தூக்கி எரியபட்டனர். இதில் சதீஷ் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் திரண்ட அப்பகுதி கிராம பொதுமக்கள்.

இச்சம்பவம் அறிந்த அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெடிவிபத்தில் தூக்கி வீசப்பட்டு நிலையில் கிடக்கும் இருசக்கர வாகனம்.

இதில் மகேஸ்வரி, பிருந்தா, வனிதா, மேனகா மற்றும் மேகலா ஆகியோர் நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இது சம்பவத்தை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். 

வெடி விபத்து சம்பவம் குறித்தும், உரிய உரிமம் பெற்றுள்ளாரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT