தமிழ்நாடு

தனியார் மயமாக்கும் தூய்மைப் பணி:  திருமுருகன்பூண்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தர்னா

1st Jun 2023 07:41 AM

ADVERTISEMENT

அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சியில் தனியார் மயமாக்கும் தூய்மைப் பணி தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை காலை (ஜூன் 1) பணிக்கு செல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருமுருகன்பூண்டி  நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் குப்பை சேகரித்தல், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய வருகின்றனர். 

தனியார் மயமாக்கும் தீர்மானத்தை கண்டித்தும், தீர்மானத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள்

ADVERTISEMENT

இந்நிலையில், பல்வேறு கட்ட எதிர்ப்புக்கு பிறகும் தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதற்கான தீர்மானம் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

தனியார் மயமாக்கும் தீர்மானத்தை கண்டித்தும், தீர்மானத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், வியாழக்கிழமை காலை பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT