தமிழ்நாடு

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை!

DIN

மேட்டூர் அணை திறந்து வைக்கும் நிகழ்வு உள்ளதால், பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் கூட்டம் பாட்னாவில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இந்த கூட்டத்திற்கு பங்கேறக காங்கிரஸ், திரிணமூல், திமுக, ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி), இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மேட்டூர் அணை திறப்புக்கு செல்லவுள்ளதால் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. காங்கிரஸின் ராகுல் காந்தியும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதால் அவர் பங்கேற்பதும் சந்தேகம்தான். இதனால், கூட்டத்தின் தேதியை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளேன்.” எனத் தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தின் தேதி மாற்றப்படவில்லை என்றால் திமுக தரப்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

டி20 உலகக் கோப்பைக்கான விளம்பரத் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

தண்ணீரை சேமிக்க ரயில்வேயின் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT