தமிழ்நாடு

சேலத்தில் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை

1st Jun 2023 09:17 AM

ADVERTISEMENT


சேலம்: சேலத்தில் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் அஸ்தம்பட்டி சின்னையா பிள்ளை திரு ஏழாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் நூல் வியாபாரி. இவரும் இவரது மனைவி மல்லிகாவும் தனது இளைய மகன் பிரவீன் குமார் மனைவியின் சகோதரி திருமணத்திற்கு புதன்கிழமை மாலை சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து உறங்கியுள்ளனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் திருநாவுகரசு வீட்டின் மதில் சுவரை மீது ஏறி குதித்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் முன்பக்க மரக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கொள்ளையடிக்கும் முயற்சி ஈடுபட்டனர். அப்போது படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்த திருநாவுக்கரசு-மல்லிகா அருகே இந்த நகை பெட்டிகளை எடுத்து சோதனை செய்தனர். அப்போது  சத்தம் கேட்டு மல்லிகா எழுந்து வந்து பார்த்த போது மர்ம நபர்கள் நகை பெட்டியை எடுத்தது தெரிய வந்தது. மல்லிகாவை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதையும் படிக்க | வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை குறைந்தது!

ADVERTISEMENT

இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையாளர் பாபு, காவல் ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைப்பெட்டியில் 50  பவுன் நகை வைத்திருந்ததாகவும் அதனை மர்ம நபர் கொள்ளை அடித்து சென்றதாக மல்லிகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் மூன்று பேர் சேர்ந்து ஈடுபட்டு இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகின்றனர். மேலும், கரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு 50  பவுன் நகைகள் கொள்ளை அடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT