தமிழ்நாடு

சென்னை கடற்கரை-சேப்பாக்கம்: ரயில் சேவை 7 மாதம் ரத்து

DIN

சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் இடையிலான ரயில் சேவை ஜூலை 1 முதல் ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே மூன்று தண்டவாளங்கள் உள்ளன. இதில் 2 தண்டவாளங்களில் புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் மற்ற விரைவு ரயில்கள் ஒரு தண்டவாளத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

இதற்கு தீா்வு காணும் வகையில் சென்னை கடற்கரை-எழும்பூா் இடைய கூடுதலாக ஒரு ரயில் பாதை அமைக்க ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதால் ஜூலை 1 முதல் 2024, ஜன.31-ஆம் தேதி வரை (7 மாதம்) சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்திலிருந்து வேளச்சேரி வரை இயக்கப்படவுள்ள ரயில் சேவைக்கான திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான அதிகாரபூா்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT