தமிழ்நாடு

இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள நேரடி நெல்கொள்முதல் மையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே நெல்கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவிலான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும்.

இதன் மூலம் நெல்கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் நெல் கொடுப்பதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT