சென்னை: 4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் செல்லும் அனைத்து மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை - எழும்பூர் இடையே 4 ஆவது ரயில்பாதை அமைக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4 ஆவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலப்புழா ரயிலில் தீ!
இந்த நிலையில், 4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 31 ஆம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.