தமிழ்நாடு

புதுச்சேரியில் திருமணம்: தாம்பூலப் பையுடன் குவார்ட்டர் பாட்டில் 

1st Jun 2023 01:25 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் நடைபெற்ற கல்யாணம் ஒன்றில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் குவார்ட்டர் பாட்டில் போட்டுக்கொடுத்த திருமண வீட்டாரால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுவாக திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு திருமணம் முடிந்தவுடன் விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த தாம்பூல பையில் சாத்துக்குடி, மாம்பழம், லட்டு, புத்தகம், மரக்கன்றுகள், பூச்செடிகள் போன்றவற்றை அளிப்பார்கள். அப்படி இல்லை என்றால் தேங்காய், வெற்றிலைப் பாக்குப் போட்டு தாம்பூல பை கொடுப்பார்கள்.

ADVERTISEMENT

ஆனால் புதுச்சேரியில் கடந்த 28-ந்தேதி சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கும், புதுச்சேரி வாணரப்பேட்டையை  சேர்ந்த  மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நகரப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின்  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் மணமகன் சார்பில் வழங்கிய தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் ஒரு குவாட்டர் சரக்கு பாட்டிலையும் சேர்த்து கொடுத்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

இந்த தாம்பூல பையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் திருமணத்திற்கு வந்த குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவருமே பெற்றுச் சென்றனர். திருமணத்திற்கு வந்தவர்களை குஷிபடுத்தும் வகையில் திருமண வீட்டார் செய்த இந்த செயல் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் புதுச்சேரியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் பெரும்பாலும் மது குடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களின் ஆசியை நிறைவேற்றவே இதை செய்ததாக மணமக்களின் நண்பர்கள் கூறினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT