தமிழ்நாடு

4.5 லட்சம் அரசு காலிப் பணியிடங்களைஉடனடியாக நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

1st Jun 2023 01:13 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 4.5 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், அவற்றை நிரப்ப மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள்கூட நிரப்பப்படவில்லை. இது அரசுப் பணியை எதிா்பாா்த்திருந்த

இளைஞா்கள் மத்தியில் மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் போ் போ் ஓய்வு பெற்றிருக்கின்றனா். இன்றைய நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4.5 லட்சமாக உயா்ந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பல்வேறு அரசுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT