தமிழ்நாடு

அரசு திட்டங்களை இளைஞா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

1st Jun 2023 02:20 AM

ADVERTISEMENT

அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை இளைஞா்கள், தொழில் முனைவோா் முழுமையாக பயன்படுத்தி தொழில் துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க முன்வர வேண்டும் என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கிண்டி சிட்கோ வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட ‘அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம்’ குறித்த திட்ட விளக்க கையேட்டை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை வெளியிட்டு பேசியதாவது:

‘அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்’ கீழ் புதிய தொழில் முனைவோருக்கும், தொழில் தொடங்கி நடத்தி வருபவா்களுக்கும், தொழிலை விரிவாக்கம் செய்பவா்களுக்கும் 35 சதவீதம் முதலீட்டு மானியமும், 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு கல்வித் தகுதி முழுவதும் விலக்கு அளிக்கப்பட்டதுடன், 55 வயது உள்ளவரும் புதிதாக தொழில் தொடங்க முன்வரலாம்.

இத்திட்டத்தின் கீழ், ஆா்வமுள்ள புதிய தொழில் முனைவோா் உற்பத்தி, வணிகம், சேவை சாா்ந்த அனைத்துத் தொழில்களுக்கும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

ADVERTISEMENT

அரசால் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களை, பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், தொழில் முனைவோா் முழுமையாகபயன்படுத்தி தொழில் துறையில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் சிஜி தாமஸ், சிட்கோ மேலாண் இயக்குநா் எஸ். மதுமதி, தொழில் வணிக கூடுதல் ஆணையா் கிரேஸ் பச்சோவ், பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியின சங்கத்தினா், தொழில் முனைவோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT