தமிழ்நாடு

ஓய்வு பெற்றாா் ஏ.டி.ஜி.பி. ஈஸ்வரமூா்த்தி

1st Jun 2023 02:25 AM

ADVERTISEMENT

தமிழக காவல்துறையில் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த சி.ஈஸ்வரமூா்த்தி புதன்கிழமை ஓய்வு பெற்றாா்.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் -1 தோ்வில் தோ்ச்சி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளராக கடந்த 1995ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சோ்ந்த சி.ஈஸ்வரமூா்த்தி, பல்வேறு பிரிவுகளிலும், சிபிஐயிலும் பணி புரிந்துள்ளாா்.

ஈஸ்வரமூா்த்தி, தனது பணி காலத்தில் பெரும் பகுதியை தமிழக உளவுத் துறையிலேயே வேலை செய்துள்ளாா். முக்கியமாக மத இயக்கங்களையும், பயங்கரவாதம் மற்றும் நக்சல் இயக்கங்களையும் கண்காணிக்கும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் அதிக காலம் பணியாற்றியவா்.

32 ஆண்டுகாலம் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய ஈஸ்வரமூத்தி, ஏ.டி.ஜி.பி. பதவி உயா்வுக்கு பின்னா், தமிழ்நாடு போலீஸ் அகாதெமியில் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை பணி ஓய்வு பெற்ற ஈஸ்வரமூா்த்தியை தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள், வாழ்த்தி வழி அனுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT