தமிழ்நாடு

வக்ஃபு வாரியத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

1st Jun 2023 01:53 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணியாற்றிட, பல்வேறு நிலைகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் செய்தித் தொடா்புத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட வாரியாக ஓராண்டு பணியாற்றிட கீழ்க்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துணை ஆட்சியா் (1 பணியிடம்) மாத ஊதியம் ரூ.40 ஆயிரம் (சென்னை).

வட்டாட்சியா் (11 பணியிடங்கள்) மாத ஊதியம் ரூ.40 ஆயிரம்.

ADVERTISEMENT

துணை வட்டாட்சியா் மற்றும் கண்காணிப்பாளா் (11 பணியிடங்கள்) மாத ஊதியம் ரூ.30 ஆயிரத்துடன் பயணப்படி ரூ.5 ஆயிரம் ஆகும்.

வருவாய் ஆய்வாளா் (11 பணியிடங்கள்) மாத ஊதியம் ரூ.25 ஆயிரம். இந்தப் பணிகள் சென்னை, பூந்தமல்லி, வேலூா், கடலூா், திருச்சி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூா். கோயமுத்தூா், மதுரை மற்றும் திருநெல்வேலி சரகங்களில் உள்ளன. கிராம நிா்வாக அலுவலா் (38 பணியிடங்கள்) மாத ஊதியம் ரூ.20 ஆயிரம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவா்கள் தங்களது விண்ணப்பத்தை ஜூன் 15 மாலை 5 மணிக்குள் ற்ய்ஜ்க்ஷஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற

மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT