தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை (ஜூன் 1) சந்திக்கவுள்ளாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 4 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.
தில்லி மாநில அரசின் நிா்வாக அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு பிற மாநில முதல்வா்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்களை அரவிந்த் கேஜரிவால் சந்தித்து வலியுறுத்தி வருகிறாா்.
பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை ஏற்கெனவே அவா் சந்தித்துள்ளாா். அதைத் தொடா்ந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளாா். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.