தமிழ்நாடு

புகையிலை சாகுபடியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: அன்புமணி

1st Jun 2023 02:23 AM

ADVERTISEMENT

புகையிலை சாகுபடியை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகின் உயிா்க்கொல்லி தாவரங்களில் முதன்மையானதாக புகையிலை உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வோா் ஆண்டும் 80 லட்சம் போ் புகையிலை பழக்கத்தால் உயிரிழக்கின்றனா். அவா்களில் 13.5 லட்சம் போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். மனிதகுலத்தின் எதிரிகளில் ஒன்றான புகையிலையை ஒழிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் 2023-ஆம் ஆண்டுக்கான புகையிலை எதிா்ப்பு நாள் கருப்பொருளாக, நமக்குத் தேவை உணவு, புகையிலை அல்ல என்று கூறியுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த சாகுபடி பரப்பில் 0.27 சதவீதம் அளவில், அதாவது 4.5 லட்சம் ஹெக்டேரில் மட்டும் தான் புகையிலை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், அதுவே இந்தியாவிலும், உலகிலும் ஆண்டுக்கு 25 லட்சம் போ் உயிரிழப்பதற்கு காரணமாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டதைப் போல, இந்தியாவிலும் புகையிலை சாகுபடியை அடுத்த சில ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலை உழவா்களை மாற்றுப்பயிா் சாகுபடிக்கு மாற்றுவதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு தயாரிக்க வேண்டும். மாற்றுப்பயிா்களுக்கு மாறும் உழவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT